1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 10 ஜனவரி 2018 (13:17 IST)

தினகரன் வலையில் மதுசூதனன்?: எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதிய கடிதத்தின் பரபரப்பு பின்னணி!

அதிமுக அவைத்தலைவரான மதுசூதனன் ஆர்கே நகர் இடைத்தேர்தல் தோல்வியையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பரபரப்பு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதம் சீக்ரெட் என மதுசூதனன் கூறினாலும் கடிதத்தில் அவர் கூறியுள்ளவை குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.
 
அவைத்தலைவரான மதுசூதனனின் கடிதத்தால் எடப்பாடி தரப்பு ஆட்டம் கண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த கடிதத்தில் மதுசூதனன் 14 கேள்விகளை எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டுள்ளார். அந்த கேள்விகளுக்கு முன்னதாக மிக நீளாமான கடிதம் ஒன்றையும் மதுசூதனன் எழுதியுள்ளார்.
 
அதில் மதுசூதனன் தோல்விக்கு காரணம் ஒரு முக்கிய அமைச்சர் எனவும், மேலும் அமைச்சர் ஜெயக்குமாரையும் குற்றம் சாட்டியுள்ளார். தோல்வி குறித்து ஏன் ஆய்வு நடத்தவில்லை. சம்மந்தப்பட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேட்டுள்ளார்.
 
தன்னுடைய கேள்விகளுக்கு திருப்தியளிக்க கூடிய வகையில் பதில் தரவில்லை என்றால், கட்சியில் தான் தன்னிச்சையாக சில முடிவுகளை எடுக்க வேண்டி வரும் என மிரட்டும் தொனியில் எழுதியுள்ளார். தேர்தல் ஆணையம் மதுசூதனன் அணிக்கே இரட்டை இலை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தனக்கு உரிய முக்கியத்துவம் எடப்பாடி பழனிச்சாமி தரவில்லை என மதுசூதனன் நினைக்கிறார்.
 
எந்த நேரம் கூட மதுசூதனன் அணி மாறலாம் எனவும், டிடிவி தினகரன் தற்போதும் மதுசூதனன் மீது மரியாதை வைத்துள்ளதாகவும், மதுசூதனனை தினகரன் முக்கியமான நபராக கருத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த கூட்டத்தொடரிலேயே தினகரனுக்கான ஆதரவு பெருகும் எனவும், அதற்கான முதல் அறிகுறித்தான் மதுசூதனனின் திடீர் போர்க்கொடி எனவும், இதன் பின்னணியில் தினகரன் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.