1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 மே 2022 (15:07 IST)

என் உயிருக்கு ஆபத்து.. பிரதமரிடம் செல்வேன்! – மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி!

Madurai Adheenam
தருமபுர ஆதீன பட்டிண பிரவேசம் குறித்து கண்டனம் தெரிவித்து பேசிய மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தருமபுர ஆதீனம் பட்டண பிரவேச நிகழ்ச்சி மே 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அன்று ஆதீனத்தை பல்லக்கில் மனிதர்கள் தூக்கி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் பட்டிண பிரவேசத்தில் பல்லக்கு தூக்க தடை விதிக்கப்பட்டது குறித்து மதுரை ஆதீனம் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் ஆளுனர் சமீபத்தில் தருமபுர ஆதீனம் சென்று வந்ததையடுத்து அரசியல் நோக்கோடு இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் தற்போது தனக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், இதுதொடர்பாக தான் பிரதமரிடம் சென்று முறையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.