1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 மே 2022 (09:35 IST)

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1,627 கோடி ரூபாய் ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் தகவல்

aiims
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1,627 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார் 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் கட்டுமான பணிகள் எதுவும் நடைபெறவில்லை என ஒரே ஒரு செங்கலை மட்டும் காண்பித்து உதயநிதி ஓட்டுக்களை அள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ரூபாய் 1,977 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதற்கட்டமாக 1627 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார் 
 
மேலும்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் விரைவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது