வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 5 மே 2022 (09:50 IST)

பல்லக்கில் தூக்கி செல்லப்படும் போப்: ஸ்டாலின், திருமாவளவனுக்கு பாஜக பிரமுகர் கேள்வி

pope
பல்லக்கில் தூக்கி செல்லப்படும் போப்: ஸ்டாலின், திருமாவளவனுக்கு பாஜக பிரமுகர் கேள்வி
தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் தூக்கிச் செல்லப்படுவதை குறித்து பழமைவாதம் என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போப்பாண்டவரை பல்லக்கில் தூக்கில் செல்வதை பழமைவாதம் என்று கூறுவார்கள் என பாஜக பிரமுகர் ஒருவர் கேள்வி எழுப்பினார் 
 
தருமபுரம் ஆதினத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில் இதுகுறித்து பாஜக தீவிரமாக பேசி வருகிறது. இந்த நிலையில் பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது
 
தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசத்தை விமர்சித்த ஸ்டாலின், திருமாவளவன்
 போன்றோருக்கு இதை பிற்போக்குத்தனம் என்று கூற துணிவுள்ளதா? பல்லக்கு தூக்குபவர்களை அடிமைகள் என்று விமர்சிப்பார்களா? கலாச்சார சீர்கேட்டை நோக்கியே  இவர்களின் ஹிந்து விரோத சிந்தனை. அனைத்தும் ஓட்டுக்காக! பதவிக்காக!