திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 25 ஜூலை 2021 (11:59 IST)

கார் விபத்து எதிரொலி: யாஷிகா ஆனந்த் மீது வழக்குப்பதிவு!

நேற்று நள்ளிரவு மகாபலிபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த், அவரது தோழி மற்றும் நண்பர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து தற்போது யாஷிகா ஆனந்த் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் மிக அதிவேகமாக ஓடியதாகவும் இதனையடுத்தே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தற்போது யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அடுத்து விரைவில் அவரிடம் விசாரணை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
யாஷிகா ஆனந்த், அவரது தோழி மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளான நிலையில் இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவரது நண்பர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
கார் விபத்து காரணமாக யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.