1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (09:12 IST)

ஒமிக்ரான் அச்சுறுத்தல்; ஊரடங்கிற்கு அவசியம் இல்லை! – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் ஒமிக்ரான் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கிற்கு அவசியம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து பேசியுள்ள தமிழக சுகாதரம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையில், ஒமிக்ரான் உறுதியானால் அவர்களை தனியாக தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

மேலும் “ஒமிக்ரான் தொற்று பரவல் வேகமாக உள்ளது; முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்தி கொள்வது போன்றவற்றை முறையாக பின்பற்றினால் ஊரடங்கிற்கு அவசியம் இல்லை” எனவும் தெரிவித்துள்ளார்.