உலகம் முழுவதும் 20 நாடுகளில் ஒமிக்ரான்; 226 பேர் பாதிப்பு! – அமெரிக்கா அதிர்ச்சி தகவல்!
உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் 20 நாடுகளில் ஒமிக்ரான் பரவியுள்ளதாக அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கிய ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது.
ஒமிக்ரான் பரவலை தடுக்க பல நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஒமிக்ரான் பாதிப்பு குறித்து பேசியுள்ள அமெரிக்கா தொற்றுநோயியல் துறை நிபுணர் ஆண்டனி பாசி, இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்போது 20 நாடுகளில் 226 பேருக்கு பரவியுள்ளதாகவும், டெல்டா போன்ற பிற வைரஸ் திரிபுகளை காட்டிலும் அதிகமான பிறழ்வுகளை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.