1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (08:53 IST)

தாழ்வு பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியானது! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைய தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. வங்க கடலில் முன்னதாக சில காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவானாலும் அவை புயலாக வலுவடையாமலே கலைந்தன. எனினும் தொடர்ந்து உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் பல இடங்களில் நல்ல மழை பெய்தது

இந்நிலையில் தற்போது அந்தமான் தீவுகள் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ள நிலையில் அடுத்த 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெரும் என்றும் கூறப்பட்டுள்ளது.