ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (09:06 IST)

எம்ஜிஆர் சிலை கல்வெட்டில் சசிகலா பெயர் சேர்ப்பு: இன்று திறக்க வாய்ப்பு!

எம்ஜிஆர் சிலை கல்வெட்டில் சசிகலா பெயர் சேர்ப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சற்றுமுன் பெங்களூரில் இருந்து கிளம்பிய நிலையில் சென்னைக்கு அவர் வந்துகொண்டிருக்கிறார். இன்னும் சில நிமிடங்களில் அவர் தமிழக எல்லைக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதிமுகவுடன் வரும் சசிகலாவின் காரில் இருந்து அதிமுக கொடியை அகற்ற காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சசிகலா சென்னை வந்தவுடன் முதலில் ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
சென்னை ராமாவரம் தோட்டத்திற்கு சசிகலா வருவார் என்ற தகவல் அந்த பகுதியில் பரவி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் சிலையை சசிகலா திறக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் சிறைக்கு சென்றதால் அந்த சிலையை அவர் திறக்கவில்லை.
 
இந்த நிலையில் அன்று திறக்காமல் விட்ட சிலையை இன்று திறக்க வாய்ப்பு என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை கல்வெட்டில் சசிகலாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது என்பதால் என்று அவர் ராமாவரம் தோட்டத்திற்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது