திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (18:30 IST)

ஏடிஎம் இயந்திரத்தை காரில் கடத்திய கொள்ளையர்கள்

தெலுங்கானா மாநிலத்தில் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையர்கள் காரில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருடவேண்டுமென்று முடிவெடித்து விட்டவர்கள் எப்படி வேண்டுமானாலும் திருடுவார்கள். அவர்களுக்கு எந்த இரக்கமும் இதில் பார்க்கப்போவதில்லை.

அதுபோல் ஒரு சம்பவம் தற்போது, அதில், ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணத்தை எடுக்க முடியாததல் அந்த இயந்திரத்தையே குண்டுக்கட்டாகக் காரில் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பகுதியில் ஏடிஎம் மையம் இருந்துள்ளது. இதில், 30 லட்சம் ரூபாய் பணமிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதை அறிந்த கொள்ளையர்கள், அதில் இருந்த பணத்தை எடுக்க வந்துள்ளனர். ஆனால், பணத்தை எடுக்க முடியாததல் அந்த இயந்திரத்தையே குண்டுக்கட்டாகக் காரில் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர். இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.