செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 ஏப்ரல் 2021 (08:38 IST)

சென்னையில் பிரச்சாரத்தை முடிக்கும் மு க ஸ்டாலின்!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்றும் நாளையும் சென்னையில் வீதி விதியாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்க உள்ள நிலையில் நாளையோடு பிரச்சாரங்கள் முடிய உள்ளன. இதனால் அரசியல் தலைவர்கள் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும், திமுக வேட்பாளர்களையும் ஆதரித்து பேசிய மு க ஸ்டாலின் இன்றும் நாளையும் சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டு முடிக்க உள்ளார்.