ஜெயலலிதா வேடத்தில் சிறுமி… அமைச்சரை ஆதரித்து வாக்குப் பிரச்சாரம்!
திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை ஆதரித்து ஜெயலலிதா வேடத்தில் இருந்த சிறுமி வாக்கு சேகரித்தார்.
திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் வித்தியாசமாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வேடமிட்டு இருக்கும் சிறுமியைப் பேசவைத்து வாக்கு சேகரித்து வருகிறார்.
ஜெயலலிதா போலவே சைகள் காமித்த அந்த சிறுமி மைக்கில் மக்களால் நான்.. மக்களுக்காகவே நான் என ஆரம்பித்து நடராஜனுக்கு ஆதரவாக பேசிக் கவனத்தை ஈர்த்தார்.