செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 6 ஜனவரி 2022 (14:56 IST)

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழகத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்… ஸ்டாலின் உறுதியளிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்டத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்தில் சொத்தை இழந்து பலர் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வது தமிழகத்தில் அதிகமாகி வருகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து அரசு சட்டமியற்றியது. ஆனால் அந்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து கடந்த வாரத்தில் வங்கி ஊழியர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனாளியானதால் குடும்பத்தைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியலையை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கம் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனப் பேசினார். அவருக்கு பதிலளித்த முதல்வர் முக ஸ்டாலின் ‘கடந்த ஆட்சிக் காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்து நிறைவேற்றப்பட்ட சட்டம் முழுமையாக இல்லை என்று கூறி கடந்த மாதம் 3ம் தேதி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. விரைவில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.