உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு..!
தென்கிழக்கு வங்க கடலில் நவம்பர் 14ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் சற்றுமுன் காற்றழுத்த தாழ்வு மையம் உருவானதாக தகவல் வெளியாகியுள்ளன.
தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மற்றும் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறும் அவசியம் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Mahendran