தொடர்புடைய செய்திகள்
- வேறு நபருடன் திருமணம்.. காதலியை 6 துண்டுகளாக வெட்டிய காதலன்!
- 6 மாத குழந்தைக்கு சத்தான பயிறு சாதம் செய்வது எப்படி?
- குழந்தைகள் மரணத்தில் லாபம் தேடுபவர்களுக்கு…? – எலான் மஸ்க் விடுத்த எச்சரிக்கை!
- குழந்தை பிறப்புக்கு பின் ஆல்யா பாட் வெளியிட்ட முதல் புகைப்படம்!
- காதலியை துண்டு துண்டாக வெட்டிய காதலன்! – உ.பியில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்!
திருமணத்திற்கு முன் பெற்ற குழந்தை ரூ.2.5 லட்சத்திற்கு விற்பனை: காதலன் - காதலி கைது!
திருமணத்திற்கு முன்பு குழந்தை பெற்று அந்த குழந்தையை 2.5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்த காதலன் மற்றும் காதலி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னையை சேர்ந்த இளைஞர் மற்றும் அவருடைய காதலி ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த அவர்கள் இடைத்தரகர் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்தனர்
இதனை அடுத்து 2.5 லட்ச ரூபாய்க்கு காதலன் காதலி ஆகிய இருவரும் இடைத்தரகரின் விற்பனை பெற்றுள்ளனர். இது குறித்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது காதலன் காதலி மற்றும் இடைத்தரகர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
இந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட குழந்தை கோபிசெட்டிபாளையத்தில் மீட்கப்பட்டதாகவும் பிறந்து ஐந்து நாட்களே ஆன நிலையில் குழந்தையை விற்று உள்ளதாகவும் தெரிகிறது
மேலும் குழந்தையை விற்ற 2.5 லட்ச ரூபாயில் காதலிக்கு ஒரு லட்ச ரூபாய் காதலன் கொடுத்துள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இது குறித்து மேலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
