1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 27 ஜனவரி 2024 (20:36 IST)

இளையராஜாவின் மகள் பவதாரணியின் உடல் நல்லடக்கம்!

bhavadharani
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி  சிறுநீரக புற்று நோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
 

அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர், தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு பவதாரணியின் உடல் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பவதாரணியின் உடலுக்கு அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,நடிகர் சிவகுமார், விஷால், சிம்பு, விஜய் ஆண்டனி, ஷோபனா சந்திரசேகர், மணிரத்னம், மிஷ்கின், உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.   

உறவினர்கள்,  பொதுமக்கள் அஞ்சலியை தொடர்ந்து, இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. அதன்பின்னர், இளையராஜாவின் தாய் சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் சமாதி அருகே பவதாரணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.