1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (07:18 IST)

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன்.. முக்கிய பொறுப்பு..!

பிரபல லாட்டரி வியாபார மன்னன் மார்ட்டின் அவர்களின் மருமகன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து உள்ளதாகவும் அவருக்கு அக்கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு தேர்தல் வரும் போதும் பிரபலங்கள் சிலர் அரசியல் கட்சிகள் இணைவதும் அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிப்பதும் காலம் காலமாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகன் இணைந்துள்ளதாக தெரிகிறது.

இவர் ஒரு விளையாட்டு வீரராக இருந்தவர் என்பதும் முன்னாள் கூடைப்பந்து வீரரான ஆதவ் அர்ஜுன் தமிழக ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்புகளை வகுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் ஆதவ் அர்ஜுன் கலந்து கொண்ட நிலையில் தற்போது அவருக்கு இக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர் மற்றும் சமூக நலன் உடைய ஆதவ் அர்ஜுன் பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva