திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (11:09 IST)

இந்தியா கூட்டணியில் ஒரு தொய்வு இருப்பது உண்மைதான்.. விசிக ஆளுர் ஷாநவாஸ்..!

கூட்டணிகள் ஒரு தொய்வு இருப்பது உண்மைதான் என்றும் ஆனால் அது மிக விரைவில் சரி செய்யப்படும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மைதான், ஆனால் அதே நேரத்தில் நிதீஷ்குமார் வெளியேறியதால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை என்று அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

மக்கள் மத்தியில் நிதிஷ்குமாருக்கு நம்பகத்தன்மை  கிடையாது என்றும் இப்போது அவர் மக்கள் மத்தியில் அம்பலம் ஆகி இருக்கிறார் என்றும்  இதுவரை அவரால் எந்த காரணத்திற்காக அணி மாறினார் என்று சொல்ல முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். எனவே கொள்கை பிடிப்பில்லாத சந்தர்ப்பவாதி நிதீஷ் குமார் போனதால் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்தார்

விடுதலை சிறுத்தைகள் மாநாட்டுக்கு தேசிய தலைவர்களை காங்கிரஸ் கட்சி அனுப்பாதது எங்களுக்கு வருத்தம் தான், ஆனால் அதே நேரத்தில் அதற்காக கூட்டணி வேண்டாம் என்று சொல்ல முடியாது

கேரளா மேற்குவங்கம் உள்பட ஒரு சில மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் தொய்வு இருந்தாலும் பாஜகவை தனியாக வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மம்தா தாராளமாக வந்தால் தனித்து போட்டியிடலாம் என்றும் அவர் கூறினார்

Edited by Mahendran