ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2024 (08:19 IST)

விசிக ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு..!

புதுக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பட்டியல் இன மாணவன் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அடையாளம் தெரியாத நபர்கள் ஆர்ப்பாட்டம் செய்த நபர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிகிறது.
 
இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் காயம் அடைந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து திடீரென விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியல் செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து தடை பட்டதாகவும் கூறப்படுகிறது.

பட்டியலில் மாணவன் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் போராட்டம் காவல்துறை அனுமதி பெற்று நடைபெற்றதாகவும் ஆனால் இந்த போராட்டத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் கொண்டு வீசியது காவல்துறையின் அலட்சியப் போக்கு என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva