திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 31 ஜனவரி 2024 (12:08 IST)

2 தொகுதிகள் என்றால் உதயசூரியன்.. ஒரு தொகுதி என்றால் பானை.. விசிகவுக்கு திமுக நிபந்தனை?

thirumavalavan
திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகள் அளிக்கப்பட்ட நிலையில்  இந்த தேர்தலிலும் இரண்டு தொகுதிகள் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
ஆனால்  இரண்டு தொகுதிகள் என்றால் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் ஒரு  ஒரு தொகுதி  பெற்றுக் கொண்டால் பானை சின்னத்தில் போட்டியிடலாம் என்றும் திமுக தரப்பில் நிபந்தனை வைப்பதாக கூறப்படுகிறது 
 
கடந்த முறை இதே பிரச்சனை எழுந்த போது ஒரு தொகுதியில் உதயசூரியன் ஒரு தொகுதியில் பானை என விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டது 
 
அதேபோல் இந்த முறையும் உதயசூரியனுக்கு ஒரு தொகுதியும் பானை சின்னத்துக்கு ஒரு தகுதியும் விடுதலை சிறுத்தைகளின் கட்சி பெற்றுக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 
 
ஆனால் இரண்டு தொகுதிகளுக்கு மேல் கிடையாது என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
Edited by Siva