1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 12 ஜூன் 2018 (11:11 IST)

பெட்ரோலுக்கு கேஷ்பேக் ஆஃபர் வழங்கும் கிரெடிட் கார்ட்டுகள்!

கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது. 
 
இதனால், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் இணைந்து கிரெடிட் கார்ட் வழங்குகிறது. இந்த கிரெடிட் கார்ட் மூலம் பெட்ரோல் போடும் போது கேஷ்பேக் மற்றும் சலுகை புள்ளிகள் வழங்கப்படுகிறதாம். 
 
அதன்படி, சிட்டி பேங்க், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. சிட்டி பேங்க், இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து இந்தியன் ஆயில் சிட்டி பிளாட்டினம் மற்றும் டைட்டானியம் கார்டுகளை வழங்குகிறது. 
 
ஐசிஐசிஐ வங்கி ஹெச்பிசிஎல் நிறுவனத்துடன் இணைந்து ஹெச்பிசிஎல் கோரல் கிரெடிட் கார்டு, ஹெச்பிசிஎல் கோரல் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு, ஐசிஐசிஐ பேங்க் ஹெச்பிசிஎல் பிளாட்டினம் கிரெடிட் கார்டுகளை வழங்கவுள்ளன.
 
பிபிசிஎல் நிறுவனத்துடன் இணைந்து எஸ்பிஐ வங்கி பிபிசிஎல் எஸ்பிஐ கார்டு வழங்குகிறது. இந்த கார்டுகளை பயன்படுத்தி கேஷ் பேக் அல்லது சலுகை புள்ளிகளை பெறமுடியும். சலுகை புள்ளிகளை அடுத்த முறை பெட்ரோல் போடும் போது பயன்படுத்திக்கொள்ளாம்.