ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பால் வேண்டும் - அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுவில் தீர்மானம்
தமிழகத்தில் லஞ்சம் ஊழல் புகார்களை விசாரிக்க விரைவில் லோக்பால் நியமிக்க மாநில அரசு முன்வர வேண்டும் – கரூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஒய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜி ஆர் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் கங்காதரன் கொடியேற்றி துவக்கி வைத்தார்.
கரூர் மாவட்ட தலைவர் சடையாண்டி வரவேற்புரையாற்றினார் .பொதுச் செயலாளர் கிருஷ்ணன் மாநில பொருளாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் நிதிநிலை அறிக்கையை அறிவித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள் விவாதத்துக்குப் பிறகு மாநில நிர்வாகிகள் அருள்ஜோஸ், முத்து முகமது மற்றும் மகாலிங்கம் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் ஐபிஎஸ் அலுவலர்களுக்கு 01.01.2016 முதல் முன் தேதியிட்டு அரியர்ஸ் வழங்குவதை போல ஓய்வூதியர்களுக்கும் வழங்கிட வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 9000 வழங்குவதை போல மாநில அரசும் ஓய்வூதியர்களுக்கு வழங்க முன்வர வேண்டும் . மேலும்., தமிழகத்தில் லஞ்சம் ஊழல் புகார்களை விசாரிக்க விரைவில் லோக்பால் நியமிக்க மாநில அரசு முன்வர வேண்டும்.
கோவை கரூர் 8 வழி சாலை என்பதால் விவசாயிகள் மற்றும் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.