1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate in Chennai increases

மாதத்தின் முதல் நாளே எகிறிய தங்கத்தின் விலை!

தமிழகம்
ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கத்தின் விலை மாதத்தின் முதல் நாளான இன்று அதிகரித்துள்ளது.   

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.  இதனிடையே இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. 
 
சென்னையில் இன்று (ஜூன் 1) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,637 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.4,628 இருந்தது. அதேபோல, நேற்று ரூ.37,024-க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.72 உயர்ந்து ரூ.37,096 விற்பனையாகிறது.
 
இதேபோல, வெள்ளி விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.76.80 ஆக இருந்தது. இன்று அது ரூ.77.30 ஆக உயர்ந்துள்ளது.