1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Again Tamilnadu announce all pass for schools

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ்! – மாணவர்கள் மகிழ்ச்சி!

Tamilnadu
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக பள்ளிகள் தொடர்ந்து செயல்படாமல் இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னதாக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை தீவிர ஆலோசனையில் உள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேர்வின்றி ஆல் பாஸ் வழங்குவதாக தொடக்க கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

மாணவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றாமல், அனைவருக்கும் தேர்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
நடிகை மீனா: ''ரஜினியுடன் அந்த விஷயத்தில் பயங்கர போட்டி உண்டு"