ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 15 மே 2021 (09:54 IST)

ஊரடங்கு மீறல்: சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2,079 வழக்குகள் !

சென்னையில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் 2,079 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தகவல். 

 
கொரோனா 2 ஆம் அலை இந்தியா முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.   
 
எனினும் முழு ஊரடங்கை மக்கள் பலர் கடைப்பிடிப்பதாக தெரியவில்லை. எனவே, நேற்று முதல் அத்தியவசியப் பணிகள் தவிர்த்து தேவையின்றி வெளியில் வாகனங்களில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.  
 
இந்நிலையில், சென்னையில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் 2,079 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,727 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இன்று முதல் ட்ரோன்கள் மூலமும் ஊரடங்கு விதிமுறை மீறுபவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.