செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 ஜூன் 2021 (19:45 IST)

ஊரடங்கு நீட்டிப்பில் என்னென்ன தளர்வுகள்? முழு விபரங்கள் இதோ:

தமிழகத்தில் ஜூலை 5 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த புதிய ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளார் அவை என்ன என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கோயில்கள் மசூதிகள் தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் வழிகாட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது
 
தொற்று குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி  உள்ளிட்ட  23 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
சாலையோர உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதி!
 
துணிக் கடைகள் நகைக் கடைகள் காலை 9 மணி முதல் 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் துணிக்கடைகள் மற்றும் நகைக் கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது 
 
வணிக வளாகங்கள் ஷாப்பிங் மால்கள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் காலை 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
 
தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி! 
 
தமிழகத்தில் ஜூலை 5 வரையிலான தளர்வுகளில் சினிமா தியேட்டர் திறக்க தமிழக அரசு அனுமதிக்கவில்லை
 
காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும் பார்வையாளர்கள் இல்லாமல் திறந்த வெளியில் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது
 
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து தனியார் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்கள் தான் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள்