1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 ஜூன் 2021 (18:34 IST)

உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எப்போது? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எப்போது என்பது குறித்து முக்கிய ஆலோசனையில் முதல்வர் முக ஸ்டாலின் தற்போது ஈடுபட்டு வருகிறார் 
 
இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்த வழக்கு நடைபெற்றபோது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்வு நடைபெறாத 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர் 
 
இந்த உத்தரவை அடுத்து சற்று முன்னர் முதல்வர் முக ஸ்டாலின் இது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர் கேஎன் நேரு மற்றும் பெரியகருப்பன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த ஆலோசனைக்கு பின்னர் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது எப்போது? என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அதன் பின்னர் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.