உள்ளாட்சி தேர்தல்: பாஜக தனித்துப் போட்டி
வரும் உள்ளாட்சித் தேர்தலில் கள்ளக்குறிச்சியில் பாஜக தனித்துப் போட்டியிடவுள்ளது.
தமிழகத்தில் வரும் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளுக்கு பாஜக தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களுக்கான 8 இடங்களிலும் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான 40 இடங்களிலும் போட்டியிடவுள்ளது.