1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 1 ஜனவரி 2021 (12:34 IST)

எனது பிரச்சார காருக்கு இன்சூரன்ஸ் இல்லையா? பதிலடி கொடுத்த கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் தேர்தல் பிரச்சாரம் செய்த காரின் இன்சூரன்ஸ் காலாவதி ஆகி விட்டதாகவும் நேர்மை குறித்து ஒவ்வொரு பிரசாரத்திலும் பேசி வரும் கமல்ஹாசனே காலாவதியான, இன்சூரன்ஸ் இல்லாத காரை பயன்படுத்துவது சரியா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர், இதுகுறித்த புகைப்பட ஆதாரங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர் 
 
இந்த நிலையில் தனது பிரச்சார காருக்கு இன்சூரன்ஸ் காலாவதி ஆகி விட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார். தான் பிரச்சாரம் செய்த காருக்கு 2022ஆம் ஆண்டு மார்ச் வரை இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறி அதற்கான ஆதாரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார் 
 
இந்நிலையில் கமல்ஹாசன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு போலியானது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது