1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 16 செப்டம்பர் 2023 (16:05 IST)

NIA அதிகாரிகள் சோதனை; 18,200 அமெரிக்க டாலர்கள் பறிமுதல்..!

NIA1
தமிழகத்தின் ஒரு சில முக்கிய பகுதிகளில் NIA அதிகாரிகள் இன்று சோதனை செய்து வரும் நிலையில் தெலுங்கானா மாநிலத்திலும் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களில் மொத்தம் 31 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் ரூ.60 லட்சம், 18,200 அமெரிக்க டாலர்கள், மொபைல் போன், லேப்டாப் ஹார்ட் டிஸ்க் ஆகியவை பறிமுதல்   செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் சென்னை கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் ஆகிய பகுதிகள் உட்பட மொத்தம் 22 இடங்களில் சோதனை செய்து வருவதாகவும் அதேபோல் தெலுங்கானா மாநிலத்தில் ஒன்பது இடங்களில் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 
 
NIA சோதனையில் பல சர்ச்சை கூறிய பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
Edited by Mahendran