புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (09:17 IST)

மது கிடைக்காததால் கண்டதையும் குடிக்கும் மது அடிமைகள்: மேலும் மூவர் பலி

தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுக்கிடைக்காமல் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு. டாஸ்மாக் உள்ளிட்ட மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இதனால் மதுக்கிடைக்காமல் மதுவுக்கு அடிமையான பலர் கள்ள சாராயத்தை நாடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மதுக்கிடைக்காததால் ஷேவிங் லோஷனை குளிர்பானத்தில் கலந்து குடித்த புதுக்கோட்டை மீனவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு ரயில்வே குடியிருப்பில் வசித்துவரும் ரயில்வே ஊழியர்களான பிரதீப், சிவராமன் மற்றும் சிவசங்கரன் மூன்று பேரும் மதுவுக்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. ஊரடங்கால் மது கிடைக்காத நிலையில் பெயிண்டில் கலக்கும் வார்னிஷில் எலுமிச்சை பழத்தை பிழிந்து அருந்தியிருக்கிறார்கள்.

சில மணி நேரங்களில் மயக்கமடைந்தவர்களை உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மதுவுக்கு அடிமையானவர்கள் மேற்கொள்ளும் இதுபோன்ற நூதன இறப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது