மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.500 கோடி - முதல்வர் பழனிசாமி!!
சீனாவில் இருந்து இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவிவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகளைத் தடுக்க, மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்திற்கான நிவாரண உதவியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் கோரியிருந்த, இந்த நிலையில், மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.500 கோடியை வழங்கியுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும் . கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது .
தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் கொரோனா ஆய்வகங்கள் அமைக்க அனுமதி கோரியுள்ளோம் - மருத்துவ உபகரணங்கள் கையிருப்பு உள்ளன, புதிதாக வென்டிலேட்டர்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
இந்தியாவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரித்து வருகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.