திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2024 (12:51 IST)

அம்பானிக்கும், அதானிக்குமான ஆட்சி தான் பாஜக ஆட்சி.. கோவையில் கனிமொழி பிரசாரம்..!

kanimozhi
திமுக எம்பி கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டாலும் அவர் தமிழகம் முழுவதும் பரவலாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். நேற்று கரூர் தொகுதியில் ஜோதிமணிக்காக பிரச்சாரம் செய்த கனிமொழி இன்று கோவையில் பிரச்சாரம் செய்து வருகிறார், அவர் இந்த பிரச்சாரத்தில் கூறியதாவதுள்
 
பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை. ஏழை விவசாயிகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்கிறது. மக்களவைத் தேர்தலில் நிச்சயமாக பாஜக ஆட்சிக்கு வராது.
 
திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி சிக்கல்கள், குளறுபடிகள் தீர்க்கப்படும். அம்பானிக்கும், அதானிக்குமான ஆட்சி தான் பாஜக ஆட்சி.  பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நிலையை நாம்  உருவாக்க வேண்டும்’ என்று பேசினார்.
 
கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் நிலையில் அவருடைய தொகுதியில் வந்து கனிமொழி எம்பி காரசாரமாக பிரச்சாரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran