செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2024 (16:09 IST)

மது அருந்தினாலோ, பார்டி நடத்தினாலோ விடுதியின் உரிமம் ரத்து - நீலகிரி மாவட்ட எஸ்பி.,

nilgiri restaurant
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் மது அருந்தினாலோ, பார்டி நடத்தினாலோ விடுதியின் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வருகை புரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இங்குள்ள தங்கும் விடுதிகளில், சுற்றுலாப் பயணிகள் மது அருந்துவது, பார்டி நடத்துவதோ போன்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த விடுதியின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட விடுதி உரிமையாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்  விடுதி வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு இருக்க வேண்டும். வரவேற்பு பகுதியில்  காவல் கட்டுப்பாட்டு அறையின் எண், சுற்றுலா பயணிகளுக்கு தெரியும் வகையில் இருக்க வேண்டும் என்று  அறிவிறுத்தியுள்ளார்.