1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2024 (18:38 IST)

பொங்கலுக்கு 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்

tamilnadu govt bus
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையொட்டி 19,484 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை  அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை விரைவில் வரவுள்ளது. இப்பண்டிகை இந்துக்களின் முக்கியமான பண்டிகை என்பதால் தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லுவர்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இவ்வாண்டு பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை  அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளதாவது:

பொங்கல்பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வரும் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மாதவரம், கிளாம்பாக்கம், தாம்பரம், பூந்தமல்லி, புறவழிச்சாலை, கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனவும், தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையொட்டி 19,484 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.