வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 ஜூன் 2021 (21:11 IST)

கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு லேகியம் !

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகிலுள்ள கிருஷ்ணா பட்டினம் - முத்துக்கூறு கிராமத்தில் பாரம்பரிய வைதியர் ஆனந்தய்யா என்பவர் கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு லேகியம் கொடுத்தும் ஆக்சிஜன் பற்றாகுறை உள்ளவர்களுக்கு சொட்டு மருந்து மூலம் ஆக்சிஜனை உயர்த்தி கொடுத்து வியப்பை ஏற்படுத்தி உள்ளார்

இதனால் அங்கு கட்டுக்கடங்காத கும்பல் குவிந்தது. அவர்களை போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தனர் இந்தநிலையில் அவரது மருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இறுதி அறிக்கை வரும் வரை அவர் அந்த மருந்தை தயார் செய்யக் கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மேலும் அவருக்கு காவல்துறை பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நீங்கள் எங்களுக்கு மருந்து தயார் செய்து கொடுங்கள் என்று அம்மாநிலத்தில் உள்ள முக்கிய பொறுப்பில் உள்ள சில அதிகாரிகள் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் முக்கிய அதிகாரிகளுக்கு அனந்தய்யாவின் மருத்துவ சேவை தொடர்ந்து வருகிறதாம். அதேவேளையில் இந்தியாவின் மருந்துக்கு இந்திய அரசின் அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் அதனை தமிழக மக்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் திராவிட தேசிய கட்சியின் தலைவர் கிருஷ்ணாராவ்.