1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 13 நவம்பர் 2020 (07:59 IST)

வேல் யாத்திரை முருகனுக்கு இல்லை... புதிய விளக்கம் கொடுத்த எல்.முருகன்!

கொரோனா முன்களப் பணியாளர்களை பாராட்டவே வேல் யாத்திரை நடத்தப்படுகிறது என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் பாஜக வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் தொடர்ந்து திருத்தணி, திருவொற்றியூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வேல் யாத்திரை நடத்த முயன்ற பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
 
மேலும் வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி பாஜக தொடர்ந்த வழக்கிலும் உயர்நீதிமன்றம் பாஜகவிடன் அடுக்கான கேள்விகளை கேட்டதுடன், பக்தி யாத்திரை என்று அரசியல் யாத்திரை செய்வதாக அளிக்கப்பட்ட டிஜிபி அறிக்கையின் பேரில் கண்டித்தது.
 
இந்நிலையில் தாங்கள் பின்வாங்க போவதில்லை என கூறியுள்ள பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் எதிர்வரும் 17 ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி வேல் யாத்திரை தொடங்கும் என்றும், இந்த வேல் யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும், வேல் யாத்திரை மதம் சார்ந்த நிகழ்ச்சி அல்ல. கொரோனா முன்களப் பணியாளர்களை பாராட்டவும், மத்திய அரசின் திட்டங்கள் பற்றி பேசவுமே வேல் யாத்திரை நடத்தபப்டுகிறது என விளக்கம் அளித்த அவர் அதிமுக - பாஜக கூட்டணி அதிருப்தி குறித்து, அதிமுக உடனான கூட்டணி வேறு, கொள்கைகள் வேறு என பதில் அளித்தார். 
 
தமிழகத்தில் இதுநாள் வரை இருந்த 100 பேர் வரை கலந்து கொள்ள கூடிய அரசியல் கூட்டங்களுக்கான அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ள நிலையில் எல்.முருகனின் இந்த அறிவிப்பு பரபரப்பையும் சர்சையையும் ஏற்படுத்தியுள்ளது.