வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 1 மார்ச் 2021 (13:57 IST)

இழுபறியில் அதிமுக - பாஜக? முருகன் சொல்வது என்ன??

பாஜகவுக்கான தொகுதி பங்கீடு நாளை அல்லது நாளை மறுநாள் தெரிவிக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தகவல். 

 
நேற்று இரவு 10 மணிக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக பாஜக தலைவர் எல் முருகன் உள்பட ஒருசிலர் பாஜக தரப்பிலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அதிமுக தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர். 
 
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இது குறித்த விபரங்களை இன்னும் ஒரு சில நாட்களில் விரிவாக தெரிவிப்போம் என்று தெரிவித்த நிலையில் அதிமுக - பாஜக தொகுதி பங்கீட்டில் இழுபறி என செய்திகள் கசிந்தன. 
 
எனவே, பாஜகவுக்கான தொகுதி பங்கீடு நாளை அல்லது நாளை மறுநாள் தெரிவிக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணி ஆட்சியை பிடிக்க வேண்டும் என தேர்தல் பணியாற்றி வருகிறோம் என எல்.முருகன் பேட்டி.