அதிமுகவுடன் விரிசல்.. அமமுகவா? மய்யமா? – பிரேமலதா அவசர ஆலோசனை!

Prasanth Karthick| Last Modified திங்கள், 1 மார்ச் 2021 (13:21 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் உடன்பாடு ஏற்படாத நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தொடர்ந்து தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசாமல் இருந்து வந்த அதிமுக இன்று அமைச்சர் தங்கமணி தலைமையில் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட இருந்தது.

இந்நிலையில் அதிமுகவில் தேமுதிகவுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என கருதிய தேமுதிகவினர் அமைச்சர் தங்கமணியுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை தவிர்த்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் குறித்து தேமுதிக நிர்வாகிகளுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் தேமுதிக இந்த தேர்தலில் மநீம அல்லது அமமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :