செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 அக்டோபர் 2021 (12:45 IST)

ஆன்மிகமும், அரசியலும்... முத்துராமலிங்கத் தேவருக்கு எல்.முருகன் புகழாரம்

ஆன்மிகமும், அரசியலும் இரு கண்கள் என்று உரைத்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம். 

 
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில், இன்று (அக்டோபர் 30) பசும்பொன் முத்துராமலிங்கனாரின் 114 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 59 ஆவது குரு பூஜை விழா நடைபெற்று வருகிறது. 
 
ஆன்மிகமும், அரசியலும் இரு கண்கள் என்று உரைத்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டினார். தேசத்தொண்டு, தமிழ்த்தொண்டு, சமயத்தொண்டு, அரசியல் தொண்டு எல்லாவற்றிலும் மக்களுக்காக குரல் கொடுத்தவரை வணங்குவோம் என்றும் எல்.முருகன் குறிப்பிட்டிருக்கிறார்.