செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 13 பிப்ரவரி 2021 (10:56 IST)

கணவரின் சம்மதத்திற்கு காத்திருக்கும் பிரேமலதா: என்னவா இருக்கும்?

தேமுதிக தனித்து போட்டியிட்டாலும் 234 தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என பிரேமலதா பேட்டி. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. அதிமுக தரப்பில் பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
 
இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் தனது சமீபத்திய பேட்டியில், தேமுதிக தனித்து போட்டியிட்டாலும் 234 தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதேநேரம் கூட்டணி தர்மத்தை மதிக்கும் கட்சி இது. எந்த கட்சியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. 
 
அமைச்சர்கள், பாமகவை சந்திப்பது 20 சதவீத இடஒதுக்கீட்டுக்காக பேசுவதாக சொல்கிறார்கள்.  கூட்டணி பற்றி என்னிடம் கேட்பதை விட, யார் இந்த கூட்டணிக்கு தலைமையோ அவர்களிடம் கேட்க வேண்டும். விஜயகாந்த் ஆணையிட்டால், நிச்சயமாக இந்த முறை தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.