1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (07:24 IST)

பாஜக வேட்பாளரை வெற்றி பெற செய்தால் இன்னொவா கார் பரிசு: எல்.முருகன் அறிவிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னொவா கார் பரிசு அளிக்கப்படும் என பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டணிப் பேச்சு வார்த்தைகள், முதல்வர் வேட்பாளர் குறித்த பரபரப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளிடம் இருந்து அதிரடி அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
 
இந்த நிலையில் நேற்று பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள் கட்சியினரிடையே பேசும்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு அளிக்கப்படும் என்று அவர் கூறியது மாவட்ட தலைவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மேலும் தமிழகத்தை பொருத்தவரை திமுக, அதிமுகவின் நிர்வாகிகளுக்கு பரிசு அளிக்கும் வழக்கம் ஏற்கனவே உள்ளதாகவும் அந்த வகையில் தற்போது பாஜக தலைவர்களுக்கு பரிசு அளிக்கும் திட்டத்தை கொண்டு வந்தது என்றும் அவர் கூறினார் 
 
மேலும் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று கூறிய எல்.முருகன், தமிழகத்தில் பாஜக கைகாட்டும் கட்சி தான் ஆட்சிக்கு வரமுடியும் என்று கூறி கட்சியினருக்கும் திக்குமுக்காட வைத்தார். எல்.முருகனின் இந்த இன்னோவா கார் பரிசு அறிவிப்பு பாஜகவில் மாற்றத்தை ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்