செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 28 நவம்பர் 2023 (14:27 IST)

மன்னிப்பு கேட்க முடியாது.. தைரியம் இல்லாத கட்சி காங்கிரஸ்: குஷ்பு

நான் தவறு செய்யவில்லை என்றும் அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறிய குஷ்பு தனித்துப் போட்டியிட தைரியம் இல்லாத கட்சி காங்கிரஸ் என்றும் விமர்சனம் செய்தார்.

சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் அவர் நடிகை தாழ்த்தப்பட்ட மக்களை அவதூறு செய்து விட்டதாக காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து இன்று காங்கிரஸ் கட்சியினர் குஷ்புவின் வீட்டை முற்றுகையிட முயற்சித்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ, நான் தவறு செய்யவில்லை அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார். மேலும் தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் தமிழ் பெண்ணாகவே வாழ்ந்து வருகிறேன் என்றும் தமிழ் கலாச்சாரங்கள் எனக்கு நன்றாக தெரியும் என்று கூறினார்.

மேலும் தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட தைரியம் இல்லாத ஒரே கட்சி காங்கிரஸ் தான் என்றும் விமர்சனம் செய்தார்.

Edited by Siva