வானதிக்கு தேசிய அளவில் பதவி: ரூட் க்ளியர் ஆன குஷ்பு!

வானதிக்கு தேசிய அளவில் பதவி: ரூட் க்ளியர் ஆன குஷ்பு!
siva| Last Updated: வியாழன், 29 அக்டோபர் 2020 (12:50 IST)
வானதிக்கு தேசிய அளவில் பதவி: ரூட் க்ளியர் ஆன குஷ்பு!
பாஜக மகளிர் அணியின் தேசிய செயலாளர் பதவி நேற்று வானதிக்கு வழங்கப்பட்டது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம், தமிழக அளவில் அவருக்கு பதவிகள் வழங்கப்படும் என ஏற்கனவே தகவல்கள் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு தேசிய அளவில் பதவி கொடுக்கப்பட்டிருப்பது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்து ஏமாற்றமடைந்த வானதிக்கு தற்போது தேசிய அளவில் பதவி கிடைத்து இருப்பது பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது

இந்த நிலையில் சமீபத்தில்
பாஜகவில் இணைந்த குஷ்புவுக்கு மாநில அளவில் பெரிய பதவி ஒன்றைக் கொடுக்கப் பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாம், ஏற்கனவே கட்சியில் சீனியரான வானதி சீனிவாசனுக்கு பதவி கொடுக்காமல் நேற்று வந்த குஷ்புவுக்கு கொடுத்தால் பிரச்சினை ஏற்படும் என்பதால் தான் வானது சீனிவாசனுக்கு முதலில் தேசிய அளவில் பதவி அளிக்கப்பட்டு, ரூட் கிளியர் செய்து விட்டதாக கூறப்படுகிறது

குஷ்புவுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றும் அப்படி இல்லை என்றால் எல்.முருகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்து விட்டு அதற்கு பதிலாக தமிழக பாஜக தலைவர் பதவியை குஷ்புவுக்கு கொடுத்த பாஜக மேலிடம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது
மொத்தத்தில் இதுவரை திமுக மற்றும் காங்கிரஸில் இணைந்த குஷ்புவுக்கு எந்தவித பதவியும் கிடைக்காத நிலையில் பாஜகவில் இணைந்த அவருக்கு மிகப் பெரிய பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :