ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 12 மார்ச் 2018 (16:34 IST)

யாரை நாய் என்று சொல்கிறார் குஷ்பு? குழப்பத்தில் காங்கிரஸ் தொண்டர்கள்

பிரபல நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் என்பது தெரிந்ததே. அவர் தனது டுவிட்டரில் அவ்வப்போது பரபரப்பான டுவீட்டுகளை பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் சற்றுமுன்னர் அவர் தனது டுவிட்டரில், 'நாய் குரைச்சாலும் சூரியன் மறையப்போறதில்லை. புரிஞ்சுக்கிறவங்களுக்கு, சாரி, குலைக்குறவங்களுக்கு புரிஞ்சா சரி' என்று பதிவு செய்துள்ளார்.

குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சியிலேயே பல எதிரிகள் உள்ளனர். அவரை எப்போது கவிழ்க்கலாம் என்று காத்து கொண்டிருக்கின்றனர். இந்த டுவீட் அவர்களுக்காகவா? அல்லது வழக்கம்போல் அவர் பாஜகவினர்களை பதம் பார்க்கும் வகையில் டுவிட்டை பதிவு செய்தாரா? என்ற குழப்பத்தில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் உள்ளனர்.