திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 7 மார்ச் 2018 (11:34 IST)

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இணைந்தார் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து டுவிட்டரில் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது டுவிட்டர் பகக்த்தில் சுமார் 5 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். வெகு அரிதாகவே அவர் டுவிட்டரில் பதிவுகளை போட்டாலும், அவற்றுக்கு லைக்ஸ்களும், ஷேர்களும் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று முதல் ரஜினிகாந்த் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டிலும் இணைந்துள்ளார். அவருடைய ஃபேஸ்புக் பக்க முகவரி http://fb.com/rajinikanth  என்பதும், இன்ஸ்டார்கிராம் பக்க முகவரி  http://instagram.com/rajinikanth என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் ஃபேஸ்புக் பக்கத்தில் 'வணக்கம்' என்ற ஒரு பதிவு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய ஒரே ஒரு புகைப்படம் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இரண்டு பக்கங்களிலும் ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்கள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது அரசியல் பயணத்திற்கு அவர் இந்த சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்