சட்டப்பேரவை தேர்தலில் போட்டியா? குஷ்பு பதில்

kushboo
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியா? குஷ்பு பதில்
siva| Last Updated: புதன், 30 டிசம்பர் 2020 (07:55 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக அதிமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தற்போது பிரசாரத்தையும் தொடங்கிவிட்டன என்பதும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பாஜகவும் தேர்தல் களத்தில் இறங்கி தீவிரமாக பணி செய்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு விரைவில் தேர்தல் பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை குஷ்பு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று கேட்டபோது, ‘சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை எனக்கு பாஜக மேலிடம் கொடுத்தால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வேன் என்று கூறினார்

ஆனால் அதே நேரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் என்னை வேட்பாளராக அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலும் பாஜகவில் எனது பணி தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே குஷ்பு சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக செய்திகள் கசிந்தன என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :