1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 29 டிசம்பர் 2020 (19:24 IST)

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் என்னென்ன இருக்கும்: முதல்வர் பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த சில நாட்களாக தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது ஏற்கனவே தெரிந்ததே. இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் என்னென்ன இருக்கும் என்பது குறித்து அவர் தெரிவித்தார் 
 
அதிமுக தேர்தல் அறிக்கையில் மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் அனைத்தும் இருக்கும் என்று கூறிய முதலமைச்சர் பழனிசாமி, கடந்தகால தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது என்று கூறியுள்ளார்
 
மக்கள் நினைத்ததை நிறைவேற்றும் அரசு அதிமுக அரசு என்றும், உயர் கல்வியில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றும் சுய உதவி குழுக்களுக்கு ரூ 12,000 கோடி கடனுதவி வழங்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு இலவச திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது