1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 டிசம்பர் 2020 (11:06 IST)

பிரதமர் மோடி சொன்ன கோவிலில் வழிபாடு; எடப்பாடியாரின் தேர்தல் பயணம்!

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசின் இதுவரையிலான நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இன்று முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாமக்கலில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அங்குள்ள பிரம்மாண்டமான அனுமான் கோவிலில் தரிசனம் செய்த பிறகு அவர் தன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்த கோவில் குறித்து முன்னதாக பிரதமர் மோடி தனது மன் கீ பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி “உயிர் மூச்சு உள்ளவரை உங்களுக்காக நான்” என்ற தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார்.