திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

காதலியை வெட்டிவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இளைஞர் தன் காதலியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த சரத்குமார், அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால் திருமணம் செய்துகொள்வது சம்மந்தமாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் எழுந்துள்ளது. அதனால் இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சரத்குமார் அந்த பெண்ணுக்கு செல்போனில் அழைத்து பேசவேண்டும் என அழைத்துள்ளார்.

இதனால் அந்த பெண் மைதானத்திற்கு சென்று அவருடன் பேசியுள்ளார். அப்போது இருவரும் வாக்குவாதம் செய்த நிலையில் அந்த பெண்ணை சரத்குமார் கழுத்து மற்றும் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதையடுத்து அந்த பெண் அரசு மருத்துவமனையியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது சம்மந்தமாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் சரத்குமாரை தேடி அவர் வீட்டுக்கு சென்ற போது அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது உடலைக் கைப்பற்றிய போலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளார்.